அறிமுகம்
இன்றைய உலகில் கணினி மனிதனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கணினி மனிதர்களுக்கு பல பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்து முடிக்க உதவுகிறது.
உதாரணமாக ஒரு ஆசிரியர் மாணவர்களின் பெறுபேறுகளை கணினியில் பதிவு செய்கிறார். கணினி அந்தத் தரவுகளை முறைவழிப்படுத்தி பெறுபேறு அறிக்கையை விரைவாகவும் துல்லியமாகவும் தயாரித்து வழங்குகிறது. இதன் மூலம் நேரமும் உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகின்றன.
கணினி என்றால் என்ன?
கணினி என்பது எமக்குத் தேவையாக பணிகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகின்ற இலத்திரனியல் சாதனமாகும்.
கணினி பயன்படுத்தப்படும் இடங்கள்
- வீடுகள்
- பாடசாலைகள்
- அலுவலகங்கள்
- வங்கிகள்
- மருத்துவமனைகள்
- கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
கணினியின் அவசியம்
- பணிகளை மிக வேகமாகச் செய்து முடிக்க உதவுகிறது.
- கடினமான கணக்கீடுகளை எளிதாகச் செய்கிறது.
- அதிகளவிலான தகவல்களைச் சேமிக்க முடியும்.
- ஒரே பணியை மீண்டும் மீண்டும் துல்லியமாகச் செய்ய முடியும்.
- நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.
குறிப்பு
- கணினி ஒரு இலத்திரனியல் சாதனமாகும்.
- கணினியால் சுயமாக சிந்திக்க முடியாது.
- கணினி தனக்குரிய வேகம், துல்லியம் மற்றும் சேமிப்புத் திறன் ஆகிய பண்புகளால் மனிதனின் பல பணிகளை எளிதாக்குகிறது.